சிங்கப்பூரில் கோவிட்-19 கிருமியினால், அக்டோபரில் மட்டும் 169 பேர் உயிரிழப்பு!

(photo: Unsplash)

சிங்கப்பூரில் கோவிட்-19 கிருமித் தொற்றினால் 75 வயது மூதாட்டி ஒருவர் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதியன்று உயிரிழந்தார். இதுவே கொரோனா தொற்றினால் சிங்கப்பூரில் ஏற்பட்ட முதல் மரணம்.

அன்றிலிருந்து தற்போது வரை கிட்டதட்ட 264 பேர் கோவிட்-19 கிருமித் தொற்றுப் பரவலினால் உயிரிழந்துள்ளனர்.

சிங்கப்பூரில் அடுத்த மாதம் வரை கோவிட்-19 கட்டுபாடுகள் செயல்படுமென அறிவிப்பு!

இதில் கடந்த 18 மாதங்களில் கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட, இந்த அக்டோபர் மாதம் மட்டும் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 18 மாதங்களை விட, இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 169 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதாவது கோவிட்-19 தடுப்பூசி போடாதவர்களிடம், டெல்டா கிருமியின் தாக்கம் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவத்துறையைச் சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவிட்-19 தடுப்பூசி போடாமல் தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையையும், தடுப்பூசி போட்டதற்கு பிறகு ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இதில் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் உயிரிழப்பை விட, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை ஏறத்தாழ 8 மடங்கிற்கும் அதிகமாகவே இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

தற்போதைய காலக்கட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை விட, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே மருத்துவமனைகளில் அதிகளவில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களில், கிட்டதட்ட 10 மடங்கிற்கும் அதிகமானோர் மரணமடைய வாய்ப்புள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

இவ்விகிதங்களின் அடிப்படையில கணக்கிடும் பொழுது, மரணமடைபவர்களில் 100க்கு 90 பேர் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அல்லது ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் அக்டோபரில் இதுவரை உயிரிழந்த 169 பேரில், 84 பேர் தடுப்பூசிக் போட்டுக் கொள்ளாதவர்கள் என்றும், 30 பேர் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இதுமட்டுமல்லாது, இந்த மாதம் அண்மையில் ஒரே நாளில் 18 பேர் மரணமடைந்திருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் இம்மாதம் 14ம் தேதியன்று 14 பேர் உயிரிழந்ததே, ஒரு நாளில் ஏற்பட்ட அதிகளவு உயிரிழப்பாக இருந்தது.

அண்மையில் உயிரிழந்த 18 பேரும் 50 முதல் 96 வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 கட்டுபாடு நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடை முதலாளிகளுக்கு பெரும் நெருக்கடி!