சிங்கப்பூரில் பான்-தீவு அதிவேக நெடுஞ்சாலையில் (PIE) விபத்து..!

Accident in Singapore
Car driver taken to hospital after accident with trailer along PIE (Photo: STOMP)

பான்-தீவு அதிவேக நெடுஞ்சாலையில் (PIE) நேற்று (பிப்ரவரி 11) பிற்பகல் டிரெய்லர் வாகனம், கார் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டது.

இதை அடுத்து, விபத்தில் காயமடைந்த காரின் ஓட்டுநரான 49 வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் (COVID-19); சிங்கப்பூரில் மேலும் மூவருக்கு தொற்று உறுதி – 6 பேர் குணமடைந்துள்ளனர்..!

சாங்கி செல்லும் திசையில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து போலீசார் மதியம் 2.50 மணியளவில் எச்சரிக்கப்பட்டனர்.

டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அந்த கார் டிரைவர் சுயநினைவுடன் இருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்களை பல ஸ்டாம்பர்கள் பகிர்ந்து கொண்டனர், இதில் ஒரு நீல நிற டிரெய்லரையும், சில்வர் காரையும் காணலாம்.

இதை தொடர்ந்து, அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் அந்த விரைவுச் சாலையின் 1, 2, 3 தடங்களைத் தவிர்க்குமாறும் நிலப் போக்குவரத்து ஆணையம் பிற்பகல் 3.05 மணிக்குள் டுவிட்டர் மூலம் தெரிவித்தது.

இந்த விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.