கொரோனா வைரஸ் (COVID-19); சிங்கப்பூரில் மேலும் மூவருக்கு தொற்று உறுதி – 6 பேர் குணமடைந்துள்ளனர்..!

COVID-19 cases
3 new cases of COVID-19 in Singapore, including DBS employee, 2 church members (PHOTOS: ST FILE, GAVIN FOO)

சிங்கப்பூர் COVID-19 என்னும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மூன்று புதிய சம்பவங்களை உறுதிப்படுத்தியுள்ளது என சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகளின் இயக்குநர் கென்னத் மேக் புதன்கிழமை (பிப்ரவரி 12) இன்று தெரிவித்துள்ளார்.

அவர்களில், இருவருக்கு கிரேஸ் அசெம்பிளி ஆஃப் காட் தேவாலயத்தில் (Grace Assembly of God church) தொடர்பு உள்ளது, மற்றொருவர் மெரினா பே நிதி மையத்தில் உள்ள DBS வங்கியில் ஊழியர் ஆவார். அவர்கள் மூவருக்கும் சீனாவின் சென்றதாக சமீபத்திய பயண வரலாறு ஏதும் இல்லை.

இதையும் படிங்க : கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட DBS ஊழியர்; உடனடி நடவடிக்கை மேற்கொண்ட DBS நிறுவனம்…!

இந்த புதிய சம்பவங்கள் மூலம் சிங்கப்பூரில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையை 50ஆக உயர்ந்துள்ளது.

தேவாலயத்துடன் தொடர்புடைய இரண்டு நபர்களும் டாங்ளின் மற்றும் புக்கிட் படோக்கில் உள்ள கிரேஸ் அசெம்பிளி ஆஃப் காட் தேவாலயங்களுக்கு சென்றுள்ளனர் என மேக் மேலும் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை நிலவரப்படி, மேலும் 6 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர், இதன் மூலம் 15 பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக குணமடைந்து வீடு திரும்பிய இந்த நபர்கள் 4, 12, 25, 29, 34 மற்றும் 40 சம்பவங்களில் உறுதிப்படுத்தப்பட்டவர்கள்.

மருத்துவமனையில் இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட 35 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், எட்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று CNA குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; சீனாவின் தற்போதைய நிலவரம் என்ன..?