கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட DBS ஊழியர்; உடனடி நடவடிக்கை மேற்கொண்ட DBS நிறுவனம்…!

DBS employee infected with novel coronavirus
DBS employee infected with novel coronavirus, some staff told to work from home

ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை DBS இன்று புதன்கிழமை (பிப்ரவரி 12) உறுதிசெய்துள்ளது.

இதனை தொடர்ந்து உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை DBS மேற்கொண்டுள்ளது, அதில் மெரினா பே நிதி மையத்தில் சில ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யவும் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு தொழிலாளி உட்பட சிங்கப்பூரில் மேலும் 2 புதிய கொரோனா வைரஸ் சம்பவம்..!

அந்த பாதிக்கப்பட்ட ஊழியர் நேற்று செவ்வாய்க்கிழமை பரிசோதிக்கப்பட்டார், அதை தொடர்ந்து புதன்கிழமை காலை கிருமிதொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்று DBS ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கையாக, பாதிக்கப்பட்ட அலுவலக இடத்தில் உள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படியும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், “இன்று மதியம் 12 மணியளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மெரினா பே நிதி மையம் டவர் 3ல் பாதிக்கப்பட்ட தளத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்வதற்காக, அவர்கள் வளாகத்தை விட்டு வெளியேறுவதை நாங்கள் உறுதிசெய்தோம்” என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஊழியருடன் நெருக்கமான தொடர்பில் இருந்த மற்ற அனைத்து ஊழியர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; சீனாவின் தற்போதைய நிலவரம் என்ன..?

இதில் பாதிக்கப்பட்ட அலுவலக இடம் மற்றும் பொதுஇடங்கள், சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி நன்றாக சுத்தம் செய்யப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன.

“இந்த இக்கட்டான நேரத்தில், வங்கி அந்த ஊழியருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவையும் வழிகாட்டலையும் வழங்கும்” என்று DBS தெரிவித்துள்ளது.

மெரினா பே நிதி மையத்தின் 43ம் மாடியில் மொத்தம் 300 ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் என்று CNA குறிப்பிட்டுள்ளது.

Source : CNA