வெளிநாட்டு தொழிலாளி உட்பட சிங்கப்பூரில் மேலும் 2 புதிய கொரோனா வைரஸ் சம்பவம்..!

Coronavirus in Singapore
2 new coronavirus cases in Singapore, including second Bangladeshi worker and RWS casino employee

Coronavirus update in Singapore : கொரோனா வைரஸ் மேலும் இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களை நேற்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) சிங்கப்பூர் உறுதிப்படுத்தியுள்ளது, என்று சுகாதார அமைச்சகம் (MOH) தினசரி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒருவர் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பங்களாதேஷ் கொரோனா வைரஸ் நோயாளியுடன் அதே இடத்தில் பணிபுரிந்தவர், மற்றொருவர் சிங்கப்பூர் நிரந்தர குடியிருப்பாளர் (PR), இவர் ஜோகூர் பாருவில் வசித்து வருகிறார், ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா கேசினோவில் பணிபுரிகிறார்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; சிங்கப்பூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 19 வெளிநாட்டு ஊழியர்கள்..!

சிங்கப்பூரில் கிருமித்தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை 47ஆக உயர்ந்துள்ளது, மேலும் ஏழு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 பேர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 9 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.

  • உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள்: 47
  • கிருமித்தொற்று இல்லை என உறுதியான நபர்கள்: 608
  • கிருமித்தொற்றுப் பரிசோதனை முடிவுகளுக்குக் காத்திருக்கும் நபர்கள்: 43
  • மருத்துவமனையிலிருந்து வெளியேறியவர்கள்: 9

இதையும் படிங்க : டாக்சி, தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு 300,000 சுவாசக் கவசங்கள்…!

நபர் 46:

35 வயதான ஆண் சிங்கப்பூர் PR. இவர் ஜொகூர் பாருவில் வசித்து வருகிறார், ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா (RWS) கேசினோவில் பணிபுரிகிறார். சீனாவுக்கு சமீபத்திய பயண வரலாறு எதுவும் இவருக்கு இல்லை.

நபர் 47:

39 வயதான பங்களாதேஷ் தொழிலாளி, சிங்கப்பூர் வேலை அனுமதி அட்டை உடையவர். சிங்கப்பூரின் 42வது சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு பங்களாதேஷ் தொழிலாளியை போல் இவரும் 10 சிலேத்தார் ஏரோஸ்பேஸ் ஹைட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்று MOH குறிப்பிட்டுள்ளது.