கொரோனா வைரஸ்; சிங்கப்பூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 19 வெளிநாட்டு ஊழியர்கள்..!

quarantine order
Singapore health ministry has issued quarantine orders to 19 people considered close contacts of the worker.

சிங்கப்பூரில் பங்களாதேஷ் ஊழியர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதை தொடர்ந்து 19 வெளிநாட்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மூன்று புதிய சம்பவங்களை சிங்கப்பூர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) உறுதி செய்தது, பாதிக்கப்பட்ட 42வது சம்பவமாக, 39 வயது பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஊழியரும் இதில் உறுதிப்படுத்தப்பட்டார்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷ் ஆடவர் முஸ்தஃபா பேரங்காடிக்குச் சென்றுள்ளார் – MOH..!

மேலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர், முஸ்தஃபா பேரங்காடிக்குச் சென்றதாகவும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அவருடன் நேரடி தொடர்பில் வந்தவர்களைத் தனிமைப்படுத்தும்படி மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியருடன் ‘The Leo’ தங்கும் விடுதியிலிருந்த 10 பேரும், மேலும் லாரியில் அவருடன் பயணம் செய்த எட்டு பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : செர்டிஸ் சிஸ்கோ ஊழியர் உட்பட சிங்கப்பூரில் 2 புதிய கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் உறுதி..!

மேலும், கட்டுமானத் தளத்தில் ஊழியரின் மேற்பார்வையாளரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தொற்றுக்கு ஆளான ஊழியர் தங்கும் விடுதிக்கும், கட்டுமான தளத்திற்கும் மட்டுமே பயணம் செய்ததாக மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

Source : Seithi