கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷ் ஆடவர் முஸ்தஃபா பேரங்காடிக்குச் சென்றுள்ளார் – MOH..!

Bangladesh man had visited Mustafa Centre
Before being admitted to hospital Bangladesh man had visited Mustafa Centre

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட புதிய மூன்று சம்பவங்களை சிங்கப்பூர் உறுதி செய்தது.

அந்த மூன்று புதிய நபர்களுக்கும் சீனா சென்ற சமீபத்திய பயண வரலாறு இல்லை என்று சுகாதார அமைச்சகம் (MOH) ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) அறிவித்தது. இதன் மூலம் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கையை 43 ஆக உயர்ந்தது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு..!

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 42வது சம்பவமாக, 39 வயது பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஆடவர் உறுதிப்படுத்தப்பட்டார்.

மேலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர், முஸ்தஃபா பேரங்காடிக்குச் சென்றதாகச் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. கடந்த 8ஆம் தேதி அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அவர், 25 காக்கி புக்கிட் ரோட்டில் உள்ள லியோ வெளிநாட்டு ஊழியர் விடுதியில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த மூன்றாம் தேதி பிடோக் பலதுறை மருத்தகத்திற்குச் சென்றதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : 3 புதிய நபர்களை உறுதி செய்த சிங்கப்பூர்..!

தற்போது அவர் தேசியத் தொற்று நோய்த் தடுப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நான்கு பேர், அதாவது 10, 13, 22 மற்றும் 26 சம்பவங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மொத்தம் ஆறு பேர் இந்த தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.