கொரோனா வைரஸ்; 3 புதிய நபர்களை உறுதி செய்த சிங்கப்பூர்..!

Coronavirus
Coronavirus outbreak: 3 new cases confirmed in Singapore, 4 more discharged

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மூன்று புதிய சம்பவங்களை சிங்கப்பூர் உறுதி செய்துள்ளது.

இந்த மூன்று புதிய நபர்களுக்கும் சீனா சென்ற சமீபத்திய பயண வரலாறு இல்லை என்று சுகாதார அமைச்சகம் (MOH) ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் டாக்ஸி மற்றும் தனியார் வாடகை ஓட்டுநர்கள் உட்பட 7 புதிய கொரோனா வைரஸ் சம்பவம்…!

இதன் மூலம் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கையை 43 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் நான்கு பேர், அதாவது 10, 13, 22 மற்றும் 26 சம்பவங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மொத்தம் ஆறு பேர் இந்த தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் DORSCON எச்சரிக்கை நிலை ஆரஞ்சுக்கு அதிகரிப்பு – நீங்கள் செய்யவேண்டியது என்ன?

இந்த மூன்று புதிய சம்பவங்களில் 71 வயதான சிங்கப்பூர் ஆடவர், பங்களாதேஷைச் சேர்ந்த 39 வயது ஆடவர் மற்றும் 54 வயதான சிங்கப்பூர் ஆடவர் ஆகியோர் அடங்குவர் என்று CNA செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஒன்றுக்கு மேற்பட்ட முறை மருத்துவ சிகிச்சையை நாடியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source : CNA