சிங்கப்பூரில் டாக்ஸி மற்றும் தனியார் வாடகை ஓட்டுநர்கள் உட்பட 7 புதிய கொரோனா வைரஸ் சம்பவம்…!

coronavirus New Cases
7 new coronavirus cases in Singapore, including taxi and private-hire drivers

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட ஏழு புதிய சம்பவங்களை நேற்று சனிக்கிழமை (பிப்ரவரி 8) சிங்கப்பூர் உறுதிப்படுத்தியுள்ளது.

இதில் டாக்ஸி டிரைவர் மற்றும் ஒரு தனியார் வாடகை கார் டிரைவர் உட்பட, மொத்தம் சிங்கப்பூரில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஆரஞ்சு DORSCON எச்சரிக்கை நிலை; அரசின் வேண்டுகோள் என்ன..?

இவற்றில் ஐந்து பேர் முன்னர் அறிவிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடையவர்கள் என்று MOH தெரிவித்துள்ளது.

இந்த நபர்களில் இரண்டு பேர் வீடு திரும்பினர், மீதமுள்ளவர்கள் பெரும்பாலும் சீராகவும் அல்லது உடல்நிலை தேறியும் வருகின்றனர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

  • சந்தேகிக்கப்பட்டு, பின்னர் கிருமித்தொற்று இல்லை என உறுதியான நபர்கள்: 438
  • கிருமித்தொற்றுப் பரிசோதனை முடிவுகளுக்குக் காத்திருக்கும் நபர்கள்: 181
  • மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவர்கள்: 2

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; சிங்கப்பூரில் ஆசிரியர் உட்பட மேலும் மூவருக்கு வைரஸ் பாதிப்பு..!

நபர் 34 & 40

ஒரு பெண் மற்றும் ஆடவரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் சுகாதாரப் பொருட்கள் விற்கும் கடையில் பணிபுரிபவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நபர் 35

64 வயதான சிங்கப்பூர் டாக்ஸி ஓட்டுநர், கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு பிப்ரவரி 7ஆம் தேதி பரிசோதனை செய்ததில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

நபர் 36 & 39

இதில் 36 வது சம்பவம், 38 வயதான சிங்கப்பூர் பெண்மணி ஆவார், இவர் ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற்ற கிராண்ட் ஹையாட் வணிகக் கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 39 வது சம்பவமாக, 51 வயதான சிங்கப்பூர் ஆடவர், இவரும் அதே வணிகக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்.

நபர் 37

இதில் 37 வது சம்பவம், 53 வயதான சிங்கப்பூரர், இவர் தனியார் வாடகை கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். மேலும், ஜுராங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 32இல் வசித்து வருகிறார்.

நபர் 38

இதில் 38வது சம்பவம், 52 வயதான சிங்கப்பூர் பெண், தி லைஃப் சர்ச் மற்றும் மிஷன்ஸ் சிங்கப்பூருக்கு விஜயம் செய்தவர், மேலும் முன்பு பாதிக்கப்பட்ட ஐவருடன் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.

மேல்விவரங்களுக்கு: go.gov.sg/moh8feb