சிங்கப்பூரில் ஆரஞ்சு DORSCON எச்சரிக்கை நிலை; அரசின் வேண்டுகோள் என்ன..?

DORSCON Orange
DORSCON Yellow to DORSCON Orange in Singapore

சிங்கப்பூரில் DORSCON எச்சரிக்கை நிலை மஞ்சள் நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிலைக்கு (பிப்ரவரி 7) உயர்த்தப்பட்டதை அடுத்து, சிங்கப்பூர் அரசாங்கம் கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

எச்சரிக்கை நிலையை ஆரஞ்சு நிலைக்கு உயர்த்தியதை அடுத்து, சிங்கப்பூர் மக்கள் பேரங்காடிகளில் உள்ள உணவுப்பொருட்களையும், மேலும் வீட்டுக்குத் தேவைப்படும் பொருட்களையும் அதிக அளவில் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் DORSCON எச்சரிக்கை நிலை ஆரஞ்சுக்கு அதிகரிப்பு – நீங்கள் செய்யவேண்டியது என்ன?

இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்களைத் தேவைக்கு அதிகமாகத் சேகரித்து வைக்க மக்கள் அவசரப்படவேண்டாம் என்று சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தேவையான கையிருப்புகள் இருப்பதாகவும். அவைகள் விரைவில் கடைகளில் நிரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

“இதில் நாம் பதற்றப்பட தேவையில்லை, மேலும் அளவிற்கு மீறி அநாவசியமாகப் பொருட்களை வாங்கித் சேமிக்க வேண்டியதில்லை.”

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வாட்ஸ்ஆப்பில் பரவிய போலியான செய்தி – சுகாதார அமைச்சகம் விளக்கம்..!

கூடுதலாக, உங்களால் முடியுமெனில் அடுத்தவர்களுக்கு உதவவும், சிங்கப்பூர் அதிகாரபூர்வ தளங்களிலிருந்து பெரும் நம்பகமான தகவல்களைப் மட்டும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.