சிங்கப்பூரில் வாட்ஸ்ஆப்பில் பரவிய போலியான செய்தி – சுகாதார அமைச்சகம் விளக்கம்..!

Fake tweet
CNA debunks fake tweet announcing school closure due to coronavirus outbreak

Fake tweet about Coronavirus : போலியான CNA ட்வீட்டின் ஸ்கிரீன்கிராப் சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்படுகிறது.

அதில் பாலிடெக்னிக் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் அடுத்த திங்கட்கிழமை மூடப்படவிருப்பதாக தகவல் இடம்பெற்றுள்ளது. இது முற்றிலும் பொய்யானது, மேலும் CNA அத்தகைய ட்வீட் செய்யவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : மலேசியா, தென் கொரியா வைரஸ் சம்பவம்; சிங்கப்பூர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 15 பேர் சிங்கப்பூரர்கள்..!

வாட்ஸ்அப்பில் பரப்பப்பட்டு வரும் இந்த போலியான படம், CNA-வின் மற்றொரு ட்வீட்டின் ஸ்கிரீன்கிராப் மாற்றம் செய்து பரப்பப்படுகிறது என CNA குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் குறித்து சுகாதார அமைச்சகம் (MOM), அண்மைத் தகவல்களை உடனுக்குடன் வழங்கிவருகிறது.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று MOM அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பாதசாரியை தாக்கிய ஈ-பைக் ஓட்டுநர் – போலீஸ் விசாரணை..!

அண்மைத் தகவல்களுக்கு, go.gov.sg/mohupdates என்ற இணையத்தளத்தை சென்று பாருங்கள்.