மலேசியா, தென் கொரியா வைரஸ் சம்பவம்; சிங்கப்பூர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 15 பேர் சிங்கப்பூரர்கள்..!

Malaysia, South Korea coronavirus cases : தென் கொரியா மற்றும் மலேசியாவில் உறுதிசெய்யப்பட்ட சில கொரோனா வைரஸ் சம்பவங்களுடன் தொடர்புடைய 109 பங்கேற்பாளர்கள் கிராண்ட் ஹையட் சிங்கப்பூரில் நடந்த வணிகக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) புதன்கிழமை நேற்று (பிப்ரவரி 5) தெரிவித்துள்ளது.

மேலும், ஜனவரி 20 முதல் ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தனியார் வணிகக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட தன் முதல் குடிமகனை உறுதிப்படுத்திய மலேசியா..!

அதில் பங்கேற்றவர்களில், 15 பேர் சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் மற்றும் 94 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆகும்.

அந்த 15 சிங்கப்பூர் குடியிருப்பாளர்களில் நான்கு பேர் வைரஸ் அறிகுறிகள் இருப்பதாகக் சந்தேகிக்கப்படுகிறது மற்றும் மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக தொற்று நோய்களுக்கான தேசிய மையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

மேலும், இதில் மீதமுள்ள 11 பேர் நன்றாக உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : வூஹான் வைரஸ்; சீனா செல்லாத 4 பேர் உட்பட 6 பேரை உறுதிசெய்த சிங்கப்பூர்..!

வணிகக் கூட்டத்தில் கலந்து கொண்ட 42 வயதான மலேசியருக்கு கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி கொரோனா வைரஸுக்கு சாதகமாக அறிகுறிகள் இருப்பதாக மலேசியா அறிவித்தது.

மேலும், இந்த வணிகக் கூட்டத்தில் கலந்து கொண்ட தென் கொரியா குடிமக்கள் இருவருக்கும் அதாவது, 38 மற்றும் 36 வயதான இருவருக்கு இந்த தொற்று இருப்பதாக தென் கொரியா புதன்கிழமை நேற்று இதனை தெரிவித்தது.

கிருமித்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து Grand Hyatt ஹோட்டல் கிருமிநாசினிகளால் சுத்தம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.