சிங்கப்பூரில் DORSCON எச்சரிக்கை நிலை ஆரஞ்சுக்கு அதிகரிப்பு – நீங்கள் செய்யவேண்டியது என்ன?

DORSCON level to orange
Coronavirus outbreak: Singapore raises DORSCON level to orange; schools to suspend inter-school, external activities

DORSCON எச்சரிக்கை நிலை மஞ்சள் நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிலைக்கு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) உயர்த்தப்பட்டதை அடுத்து, சிங்கப்பூர் அரசாங்கம் கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

DORSCON என்பது வண்ண-குறியிடப்பட்ட கட்டமைப்பாகும், இது தற்போதைய நோய் நிலைமையைக் காட்டும்.

மார்ச் விடுமுறைகள் முடியும் வரை இடைநிலை பள்ளி மற்றும் வெளி நடவடிக்கைகளை பள்ளிகள் நிறுத்தி வைக்கும் என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வாட்ஸ்ஆப்பில் பரவிய போலியான செய்தி – சுகாதார அமைச்சகம் விளக்கம்..!

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களும் தங்களின் பங்கை ஆற்றினால் மட்டுமே, இது பயன் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றை தவிர்ப்பதற்கான மிகச் சிறந்த வழி:

  • நல்ல தனிநபர் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கவும்.
  • உங்கள் கைகளை சோப் மற்றும் தண்ணீர் கொண்டு அடிக்கடி கழுவவும்.
  • மேற்குறிப்பிட்டவை இல்லை எனில் கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்தவும்.
  • உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
  • கைகுலுக்குவதைத் தவிர்க்கவும், மாற்று முறைகளில் தொடர்புகொள்ளவும்.

இதையும் படிங்க : கொரோனா வூஹான் வைரஸ்; சிங்கப்பூர் ஹோட்டல்கள் மோசமாக பாதிப்பு..!

சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவும்:

  • உங்களுக்கு உடல் நலமில்லை எனில், வீட்டிலேயே இருக்கவும்.
  • நீங்கள் மருத்துவரைச் செல்லக் காண்கிறீர்கள் எனில், முகக் கவசம் அணிந்துகொள்ளவும்.
  • அமைதியாகவும், மேலும் விழிப்பாகவும் இருக்கவும்.

அண்மைத் தகவல்களைத் தெரிந்துகொள்ள go.gov.sg/mohupdates என்ற இணையப்பக்கத்திற்குச் செல்லவும்.