கொரோனா வூஹான் வைரஸ்; சிங்கப்பூர் ஹோட்டல்கள் மோசமாக பாதிப்பு..!

Coronavirus : கொரோனா வூஹான் வைரஸ் தொற்று காரணமாக சிங்கப்பூரில் வெளிநாட்டு பயணிகளுக்காக இயங்கும் ஹோட்டல்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் ஹோட்டல்கள் ரத்துசெய்தல் அதிகரித்து வருவதாகவும், சில ஹோட்டல்கள் அறைகளை சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்ய கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பாதசாரியை தாக்கிய ஈ-பைக் ஓட்டுநர் – போலீஸ் விசாரணை..!

ஓசியா (Oasia) ஹோட்டலில் தங்கியிருப்போர் விகிதம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், நீண்ட காலத்திற்கு இது கட்டுப்படியாகாது என்றும், சீனப் பயணிகளை வணிகத்திற்காக ஹோட்டல்கள் பெரிதும் நம்பியுள்ளது என்றும் திரு கியோங் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 20% வருமானத்தில் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வரும் மாதங்களில் நிலைமை முன்னேறுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் கொண்ட ஒரு அறையை சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்வதற்கான செலவு தோராயமாக $2,000 ஆகும், என்று சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்: பணியிடங்கள் மற்றும் ஊழியர்களுக்கு மனிதவள அமைச்சகம் கூடுதல் ஆலோசனை..!

முன்னதாக, “கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுற்றுலாத்துறை ஏற்கனவே நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக சீனாவிலிருந்து வரும் வருகையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,” என STB தனது ஊடக வெளியீட்டில் தெரிவித்தது.

மேலும், சிங்கப்பூரின் மொத்த சர்வதேச வருகையாளர்களின் வருகையில் சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டும் சுமார் 20 சதவீதம் உள்ளனர், மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு சுமார் 3.6 மில்லியன் வருகையாளர்கள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.