கொரோனா வைரஸ்; சிங்கப்பூரில் ஆசிரியர் உட்பட மேலும் மூவருக்கு வைரஸ் பாதிப்பு..!

Novel coronavirus
Novel coronavirus: 3 new patients in Singapore with no China travel, link to existing cases

Novel coronavirus : சிங்கப்பூரில் கொரோனா வைரஸின் மூன்று புதிய சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் முன்பு பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இல்லை, மேலும் சமீபத்தில் அந்த மூவரும் சீனாவுக்குப் பயணமும் மேற்கொள்ளவில்லை என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் DORSCON எச்சரிக்கை நிலை ஆரஞ்சுக்கு அதிகரிப்பு – நீங்கள் செய்யவேண்டியது என்ன?

இதன் மூலம் நாட்டின் மொத்தம் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை 33 ஆகக் உயர்ந்துள்ளது. அறிவிக்கப்பட்ட இந்த மூன்று புதிய சம்பவங்களில் ஒரு ஆசிரியரும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டனர். எஞ்சிய 31 பேரில் பெரும்பாலானோரின் உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது.

இந்த மூவரில் முதல் சம்பவம் 53 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் ஆவார். அவர் அண்மையில் சீனாவுக்குப் பயணம் ஏதும் மேற்கொள்ளாவிட்டாலும் சென்ற மாதம் 6, 11, 17 ஆகிய தேதிகளில் மலேசியாவில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் சாங்கி பொது மருத்துவமனையின் சிறப்பு அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஆரஞ்சு DORSCON எச்சரிக்கை நிலை; அரசின் வேண்டுகோள் என்ன..?

அதில் இரண்டாவது நபர் 42 வயதுடைய சிங்கப்பூர் பெண். இருவருக்கும் சமீபத்திய சீன பயண வரலாறு ஏதும் இல்லை. இவர் விக்டோரியா தொடக்கக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இதன் காரணமாக பள்ளியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மூன்றாவது நபர் 39 வயது சிங்கப்பூர் பெண் இவரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சீனாவுக்கு அண்மையில் பயணம் மேற்கொள்ளாத இவர், மலேசியாவில் சென்ற மாதம் 22 முதல் 29ஆம் தேதி வரை தங்கியிருந்தார். தற்போது செங்காங் பொது மருத்துவமனையில் இவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.