யுஷுனில் கார் என்ஜின் பலத்த சத்ததுடன் வெடித்து தீ விபத்து

themoolahmama/TikTok and Mothership reader

யுஷுனில் நேற்று அக்டோபர் 2 ஆம் தேதி கார் என்ஜின் பெட்டி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த காணொளி காட்சிகள் அடங்கிய வீடியோ டிக்டாக் தளத்தில் பகிரப்பட்டது.

சிங்கப்பூர் டோட்டோ: பிரம்மாண்ட முதல் பரிசு S$13 மில்லியனை தட்டிதூக்கிய ஒரே ஒரு டிக்கெட்!

“”Just another day in Yishun” என்ற தலைப்பில் பயனர் அதனை பகிர்ந்து இருந்தார்.

வாகனத்தின் இன்ஜின் சப்தத்துடன் வெடிப்பதை டிக்டாக் வீடியோவில் காண முடிந்தது.

வெடிப்புக்குப் பிறகு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) அதிகாரிகள் வாகனத்தை போர்வையால் மூடி நெருப்பை அணைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இதில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் தங்கம் விலை 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவு