சிங்கப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் தீடீர் தீ விபத்து; ஊழியர் பலி.!

Cargo ship fire incident
Pic: AFP

இலங்கையில் இருந்து சிங்கப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்குக் கப்பலில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. MSC Messina என்ற அந்த சரக்கு கப்பல் ஜூன் 25ம் தேதி வங்காள விரிகுடா அருகில் வந்து கொண்டிருந்த போது, கப்பலில் தீ ஏற்பட்டது.

சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்ட பின்னர், கடந்த ஜூலை 6ம் தேதி சிங்கப்பூருக்கு அந்த கப்பல் இழுத்துக் கொண்டுவரப்பட்டது. சரக்குக் கப்பலின் இயந்திர அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கடற்கரையில் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி கொட்டுவது போன்ற காட்சி..!

சரக்கு கப்பலில் இருந்த கொள்கலன்கள் இறக்கிவைக்கப்பட்டுள்ளன. கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் கப்பல் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 6 ஊழியர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் வந்தடைந்துள்ள அந்த சரக்கு கப்பல் தற்போது சரிசெய்யப்பட்டு வருவதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்ல ஏற்பாடு செய்யப்படும் என சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாப்படும் தேதி அறிவிப்பு.!