தீவு விரைவுச் சாலையில் வாகனங்கள் மோதி கோர விபத்து- ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி!

Photo: SG Road Vigilante Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள பான் விரைவுச் சாலையில் (Pan Island Expressway- ‘PIE’) துவாஸை (Tuas) நோக்கிச் செல்லும் சாலையில், ஜனவரி 21- ஆம் தேதி அன்று அதிகாலை 05.00 AM மணியளவில் இரண்டு கார்கள், இரண்டு டேக்சிகள், ஒரு இரு சக்கர வாகனம், ஒரு லாரி என ஆறு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

மகிழ்ச்சியுடன் பீட்சா உணவுகளைப் பெற்றுக் கொண்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!

இந்த கோர விபத்து குறித்து காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையின் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.

விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேரை டான் டொக் செங் மருத்துவமனைக்கு (Tan Tock Seng Hospital) ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அவர்களின் வயது 19- க்கும் 69- க்கும் இடைப்பப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான வாகனங்களை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து அப்புறப்படுத்தினர். விபத்தில் இரு சக்கர வாகனம் முற்றிலும் சேதமடைந்த நிலையில், கார்களும் சேதமடைந்துள்ளது.

திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஸ்கூட்’ விமான சேவை- ஏப்ரல் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சிங்கப்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே, விபத்து நடந்த பகுதியில் வாகனம் ஒன்றில் தீப்பற்றியதாகவும், அதனை தண்ணீர் பீய்ச்சியடித்து முழுவதும் அணைத்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவிக்கின்றனர்.