மகிழ்ச்சியுடன் பீட்சா உணவுகளைப் பெற்றுக் கொண்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!

Photo: ItsRainingRaincoats Official Facebook Page

சிங்கப்பூரில் ‘ItsRainingRaincoats’ என்ற தொண்டு அமைப்பு தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு (Migrant Workers) உணவுகளை வழங்குதல், பண்டிகை காலங்களில் பரிசுப் பொருட்களை வழங்குதல் உள்ளிட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்திய குடியரசுத் தினம்- சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அழைப்பு!

இந்த நிலையில், ‘ItsRainingRaincoats’- ன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “கடந்த டிசம்பர் 31- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள லகுனா கோல்ஃப் க்ரீனில் (Laguna Golf Green) கடினமாக உழைத்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மிச்செல் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோர் இணைந்து பீட்சா உணவுகளை வழங்கினார். இதனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர். அன்றைய தினம் சுமார் 380 பீட்சாக்கள் விநியோகிக்கப்பட்டது.

பீட்சாக்களைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்கள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். பின்னர், தொழிலாளர்களுடன் மிச்செல் உள்ளிட்டோர் சிறிது நேரம் கலந்துரையாடினர்.

உணவக சமையலறையில் தீ… துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்த பொதுமக்கள்

மிச்செல் மற்றும் அவரது நண்பர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுகளை வழங்குவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, கடந்த 2022- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரபல உணவகமான மெக்டொனால்டில் (McDonald’s) இருந்து வாங்கப்பட்ட காலை உணவுகளை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கியிருந்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.