தொடர் விடுமுறை காரணமாக, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Photo: LTA

சிங்கப்பூரில் ரமலான் நோன்பு மார்ச் 23- ஆம் தேதி வியாழன்கிழமை அன்று தொடங்கியுள்ளதால் ஜோகூர் மாநிலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தரின் பிறந்தநாள் என்பதால் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீசிடம் நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி சிக்கிய பெண்

தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதால், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள ஜோகூர் (Johor)- சிங்கப்பூர் (Singapore) சாலையில் நேற்று (மார்ச் 23) காலை முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நேரில் ஏற்பட்டது. அதேபோல், ஜோகூர் பாலம் மற்றும் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியிலும் (Woodlands Checkpoint) கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையத்தில் இருந்து இயங்கத் தொடங்கிய ‘ஜெட்ஸ்டார் ஏசியா’ விமான சேவைகள்!

மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சிங்கப்பூரை நோக்கி பயணித்ததால் தான், இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக, சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (Immigration and Checkpoints Authority- ‘ICA’) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.