வாக்குப்பதிவு நாளன்று ஸ்தம்பித்து போன காஸ்வே.. 8 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் – வாகனமோட்டிகள் கடும் அவதி

causeway-polling-day 8-hour jam
LTA

சிங்கப்பூரின் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நாளான நேற்று (செப்.1) மாலை காஸ்வே வழியாக மலேசியா – ஜோஹூருக்குச் செல்லும் பயணிகள் சுமார் எட்டு மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

நீண்ட வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை உட்லண்ட்ஸ் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் காட்சியை நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) காஸ்வே கண்காணிப்பு கேமரா எடுத்த புகைப்படங்கள் மூலம் காண முடிந்தது.

அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த 7040, 1388 ஆகிய 4D டிரா எண்கள்

முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த போக்குவரத்து நெரிசலில் சுமார் எட்டு மணிநேரம் சிக்கி தவித்ததாக நெரிசலைக் கண்காணிக்கும் டெலிகிராம் அரட்டை குழு உறுப்பினர்கள் கூறினர்.

இருப்பினும், துவாஸ் இரண்டாவது இணைப்பு வழி பெரும்பாலும் காலியாகத் தோன்றியது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

S Pass தகுதி சம்பளம் செப்.1 முதல் அதிகரிப்பு: “சம்பளத்தை உயர்த்த வேண்டும் அல்லது Work permit ஊழியர்களை சார்ந்திருக்க வேண்டும்”