S Pass தகுதி சம்பளம் செப்.1 முதல் அதிகரிப்பு: “சம்பளத்தை உயர்த்த வேண்டும் அல்லது Work permit ஊழியர்களை சார்ந்திருக்க வேண்டும்”

E Pass applications mom 43 சதவீத ஊழியர்களுக்கு 3 முறை அனுமதி கிடைத்துள்ளது

S Pass வேலை அனுமதி புதுப்பித்தல்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் செப்.1 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது நிறுவனத்தின் வணிகச் செலவுகள் மற்றும் செயல்பாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Work permits, S Pass ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் மிக பெரிய மோசடி – சிக்கிய நிறுவனங்கள்

ஏனெனில், Work permit வேலை அனுமதி வைத்திருப்பவர்களுடன் ஒப்பிடும்போது, S Pass வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவு தான். அதன் காரணமாக இதில் பெரிய தாக்கம் இருக்காது என்று சில நிறுவனங்கள் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தன.

எவ்வாறாயினும், $3,000 க்கும் குறைவாக சம்பாதிக்கும் S Pass வைத்திருப்பவர்களில் பெரும்பகுதியைக் கொண்ட சில நிறுவனங்களும் இருக்க தான் செய்கின்றன.

ஆகையால் ஊழியர்களை தக்கவைக்க அந்நிறுவனங்கள் ஊதியத்தை உயர்த்த வேண்டியிருக்கும் அல்லது Work permit அனுமதி வைத்திருப்பவர்களை அதிகம் சார்ந்து இருக்க வேண்டும்.

நிதிச் சேவைகளில் S Pass புதுப்பித்தல்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் $2,500லிருந்து $3,500 ஆக அதிகரித்தது, மற்ற எல்லாத் துறைகளுக்கும் $3,000 ஆகவும் அது உயர்ந்தது.

கடந்த 2022 செப்டம்பர் 1 அன்று உயர்த்தப்பட்ட S Pass புதுப்பித்தல்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் அதுவாகும்.

இந்நிலையில், 2023 செப்டம்பர் 1 முதல், புதிய S Pass விண்ணப்பங்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் $3,150 ஆகவும், நிதித் துறைக்கு $3,650 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்த சம்பளம் உயர்வு குறித்து 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

நிறுவனங்கள் தங்களை தயார் செய்துகொள்ள போதுமான அவகாசம் அளிக்கப்பட்டு தற்போது சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் செப்.1 முதல் நடப்புக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்