மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக உணவுப் பொருள்களை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு அபராதம்..!

CCL Impex fined vegetables illegally importing
(Photo: Singapore Food Agency)

சிங்கப்பூரில் உள்ளூர் நிறுவனமான சி.சி.எல் இம்பெக்ஸ் (CCL Impex) சட்டவிரோதமாக உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ததற்காக S$3,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 387.5 கிலோ புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளையும், மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல பொருட்களில் சுமார் 506.7 கிலோ பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதையும் படிங்க : பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும் பிற வாகனங்கள் பறிமுதல்..!

மேலும், இதில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக SFA ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட காய்கறிகள் அறியப்படாத இடத்திலிருந்தும் வந்ததாகவும், மேலும் கட்டுப்பாடற்ற அல்லது அதிகப்படியான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு இருந்தால் அது உணவு பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் SFA தெரிவித்துள்ளது.

புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தால், S$10,000 வரை அபராதம், மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகள் S$1,000 வரை அபராதம் மற்றும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுக்கு S$2,000க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிகமான COVID-19 சோதனை வசதிகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…