சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிகமான COVID-19 சோதனை வசதிகள்..!

Singapore swab testing migrant workers
More Covid-19 swab testing facilities for migrant workers by end-2020. (Photo Credit : AFP)

சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிகமான COVID-19 ஸ்வாப் என்னும் சோதனை வசதிகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வழக்கமான COVID-19 சோதனைகளை விட, இந்த ஆண்டு இறுதிக்குள் அதிகமான தங்கும் விடுதிகளில் சோதனை வசதிகள் மற்றும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர்வாசிகளுக்கு “எங்கும் பயணிக்காத சொகுசுக் கப்பல்” அனுபவம்.. அடுத்த மாதம் முதல்..!

தங்கும் விடுதிகளில் தற்போது வழக்கமான சோதனை (RRT) வசதிகள் உள்ளன, இந்த மாத இறுதிக்குள் கூடுதலாக ஒன்பது வசதிகள் அமைக்கப்படவுள்ளதாக மனிதவள அமைச்சகம் மற்றும் சுகாதார மேம்பாட்டு வாரியம் இன்று (அக்டோபர் 8) கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.

மேலும், இந்த வழக்கமான சோதனை (RRT) வசதிகளின் அதிகரிப்பு மூலம் 35,000 வெளிநாட்டு ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும், இரண்டு வாரங்களுக்கும் ஒரு முறை இதுபோன்ற சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, தங்கும் விடுதிகளில் ஒவ்வொரு நாளும் 2,600க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும், கட்டுமான, கடல் மற்றும் உற்பத்தி துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும், ​​14 சோதனை மையங்களில் வழக்கமான சோதனைகள் (RRT) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆன்லைன் ஸ்வாப் பதிவு முறை மூலம், முதலாளிகள் தங்களது விருப்பமான சோதனை நடக்கும் இடங்களையும், சோதனை தேதிகளையும் தேர்வுசெய்து, தங்கும் விடுதிகளில் உள்ள சோதனை வசதிகள் அல்லது பரிசோதனை மையங்களில் சோதனைக்குத் தங்கள் ஊழியர்களை உட்படுத்தலாம்.

இந்த பரிசோதனை மையங்கள் மெரினா பே, ஓல்ட் போலீஸ் அகாடமி மற்றும் சிங்கப்பூர் டர்ஃப் கிளப் போன்ற இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பூன் லே ஷாப்பிங் சென்டரில் இளைஞருக்கு கத்திக்குத்து – ஒருவர் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…