சிங்கப்பூர் பூன் லே ஷாப்பிங் சென்டரில் இளைஞருக்கு கத்திக்குத்து – ஒருவர் கைது..!

knife attack Boon Lay Shopping Centre
knife attack at Boon Lay Shopping Centre (Photo: Di Aziz and Nadyn Danny/ Facebook )

பூன் லே ஷாப்பிங் சென்டரில் நேற்று (அக். 7) 23 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

நேற்று மதியம் 12.40 மணியளவில், 221 பூன் லே பிளேஸில் ஆபத்தான ஆயுதத்தால் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 33,100 வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அல்லது பயிற்சி வழங்கப்பட்டுள்ளது..!

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவு அடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனநல மதிப்பீட்டிற்காக அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட, நீதிமன்ற உத்தரவு பெற வேண்டும் என்று காவல்துறை பணியாற்றுவதாகவும் அது இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், சாம்பல் நிற சட்டை அணிந்த அந்த நபர், NTUC FairPrice சூப்பர் மார்க்கெட்டில் மருத்துவ உதவிகள் பெறுவதை காணமுடிகிறது.

மேலும், சூப்பர் மார்க்கெட்டின் நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் இல்லை என்று செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : லிட்டில் இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை – பலர் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…