லிட்டில் இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை – பலர் கைது..!

public entertainment outlets violating Covid-19

சிங்கப்பூரில் கோவிட் -19 பாதுகாப்பு விதிகள், மதுபான உரிம நிபந்தனைகள் அல்லது இரண்டையும் மீறியதற்காக பதினான்கு பொது பொழுதுபோக்கு நிலையங்கள் காவல்துறையினரால் பிடிபட்டுள்ளன.

சைனாடவுன், சென்ட்ரல் மால், புகிஸ், ஜலான் புசார் மற்றும் லிட்டில் இந்தியா ஆகிய இடங்களில் உள்ள பொது பொழுதுபோக்கு நிலையங்கள் மற்றும் மசாஜ் நிலையங்களில் மத்திய காவல்துறை மேற்கொண்ட ஒரு மாத அமலாக்க நடவடிக்கையைத் தொடர்ந்து குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை (அக். 7) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சாங்கி விமான நிலையத்தில் COVID-19 பரிசோதனைக் கூடம்..!

14 பொது பொழுதுபோக்கு நிலையங்கள் குறித்து விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன, அதுகுறித்த விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

சுமார் 21 மசாஜ் நிலையங்கள் விதிகளை மீறியுள்ளதாகவும் காவல்துறை நடவடிக்கைகள் கண்டறிந்துள்ளன. இவற்றில் 16 நிலையங்கள் உரிமம் இல்லாமல் இயங்கின, மேலும் ஐந்து நிலையங்கள் மசாஜ் நிலைய விதிகளை மீறி பிடிபட்டன.

உரிமம் பெறாத பதினாறு நிலையங்களில் ஐந்து பேர் சட்டவிரோதமாக பாலியல் சேவைகளை வழங்கியது இதில் கண்டறியப்பட்டது.

மசாஜ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, ​​19 பேரை காவல்துறை கைது செய்தனர். வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் 6 பேர் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.

மேலும், மூன்று பேர் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டம் மற்றும் குடிவரவு சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.

இதில், மகளிர் சாசனத்தின் கீழ் 28 முதல் 38 வயதுக்குட்பட்ட ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் 30 முதல் 42 வயதுக்குட்பட்ட நான்கு பெண்கள் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டம் மற்றும் மகளிர் சாசனத்தின் கீழ் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க : COVID-19 தடுப்பு மருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராக இருக்கக்கூடும் : WHO தலைவர்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…