சாங்கி விமான நிலையத்தில் COVID-19 பரிசோதனைக் கூடம்..!

Changi airport covid-19 testing
(Photo: AFP/Getty Images)

சர்வதேச விமான பயணிகளுக்காக சிங்கப்பூரின் எல்லைகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வரும் மாதங்களில், சாங்கி விமான நிலையத்தில் COVID-19 பரிசோதனைக் கூடம் ஒன்று நிறுவப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யே காங் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு கூடம் உதவியுடன் விமான பயணிகள், விமானம் ஏறுவதற்கு முன்னரே கிருமித்தொற்று கண்டறியப்பட்டு தடுத்து நிறுத்தப்படலாம்.

அதே போல வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து தொற்று பரவுவதையும் தடுத்து நிறுத்தலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியல்..!

அதாவது விமான பயணத்திற்கு பெரிதும் தடையாக இருந்து வரும் தொற்று தடுப்பு குறித்த பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் வீட்டில் தங்கும் உத்தரவுகளை குறிப்பிட்ட அடிப்படையில் நீக்கவும் அவை உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த புதிய கிருமி சோதனை கூடம் ஏற்கனவே சாங்கி விமான நிலையத்தில் உள்ள பரிசோதனை வசதியுடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் சுமார் 10,000 பேர் வரை சோதனை மேற்கொள்ளலாம் என்று திரு. ஓங் கூறினார்.

ஒரே அளவிலான பாதிப்புகளை கொண்ட மற்ற நாடுகளிலிருந்து பயணிகளை வரவேற்க சிங்கப்பூர் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அதன் பின்னர், அந்தந்த நாடுகளுக்கு சிங்கப்பூரர்கள் பயண அனுமதி குறித்து அவற்றின் அரசாங்கங்கள் பரிசீலிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : பாதுகாப்பான நாடுகளுடன் மீண்டும் விமான பயணத்தை தொடங்க சிங்கப்பூர் பேச்சுவார்த்தை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…