கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியல்..!

(Photos: Wikimedia Commons/Project Manhattan, AFP/Roslan Rahman and Google Maps)

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிய இடங்களின் பட்டியலில், சூப்பர்மார்கெட் மற்றும் சுற்றுலாத் தலம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளதாக MOH தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : பாதுகாப்பான நாடுகளுடன் மீண்டும் விமான பயணத்தை தொடங்க சிங்கப்பூர் பேச்சுவார்த்தை..!

புதிய இடங்களின் பட்டியல்:
  • Resorts World செண்டோசாவில் உள்ள Hard Rock Cafe
  • 30 பேஷோர் ரோட்டில் உள்ள La Rouge அழகு நிலையம்
  • தெம்பனிஸில் உள்ள IKEA
  • Universal Studios
  • தெம்பனிஸ் நார்த் டிரைவ் 2இல் உள்ள Giant hypermarket
  • காத்தோங் நீச்சல் குளத்தில் உள்ள BearyFun ஜிம்
  • 84 பேஷோர் ரோட்டில் உள்ள newEcon-Top Choice சூப்பர்மார்கெட்
(Source: Ministry of Health)

கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோருக்குத் தகவல் அளிக்கப்படும் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சாங்கி ஏர்போர்ட் பரபரப்பான விமான நிலையம் என்ற பட்டியலில் 58வது இடத்திற்கு சரிவு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…