சாங்கி ஏர்போர்ட் பரபரப்பான விமான நிலையம் என்ற பட்டியலில் 58வது இடத்திற்கு சரிவு..!

Changi airport drops busiest airport list
Changi airport drops busiest airport list (PHOTO: Greg Waldron)

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம், பரபரப்பான விமான நிலையம் என்ற பட்டியலில் 7வது இடத்திலிருந்து 58வது இடத்திற்கு சரிந்துள்ளது.

கோவிட் -19 தொற்று சூழல் காரணமாக பயணிகள் வரத்து குறைந்த காரணத்தினால் சாங்கி விமான நிலையத்தின் வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சர்வதேச விமான போக்குவரத்து மையம் என்ற பெயருடன் சிங்கப்பூர் மீண்டும் மிளிரும் – துணைப் பிரதமர் ஹெங்..!

தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போது, ​ தற்போது அதன் வழக்கமான பயணிகள் எண்ணிக்கையில் வெறும் 1.5 சதவீதமும், மொத்த விமானங்களின் எண்ணிக்கையில் 17 சதவீதமும் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பரபரப்பான விமான நிலையம் பட்டியலில் ஏழாவது இடத்திலிருந்து தற்போது 58வது இடத்திற்கு சரிந்துள்ளது, மேலும் தற்போது உலகின் 49 நகரங்களுக்கு நேரடி விமான சேவைகளை வழங்குகிறது.

இன்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யே குங் (Ong Ye Kung) பாராளுமன்றத்தில் இதனை குறிப்பிட்டார்.

உலக பயணக் கட்டுப்பாடுகள் சாங்கி விமான நிலையக் குழு (CAG) மற்றும் தேசிய விமான சேவையான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) ஆகியவற்றிற்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

SIA, CAG மற்றும் விமானத் துறையில் உள்ள பிற நிறுவனங்களுக்கு அரசாங்கம் முடிந்தவரை தொடர்ந்து தன்னுடைய ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் சுமார் 3,200 பெண்கள் வேலையிழந்துள்ளனர் – மனிதவள அமைச்சர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…