சர்வதேச விமான போக்குவரத்து மையம் என்ற பெயருடன் சிங்கப்பூர் மீண்டும் மிளிரும் – துணைப் பிரதமர் ஹெங்..!

(Photo: Roslan Rahman / AFP/Getty Images)

கொரோனா கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சர்வதேச விமான போக்குவரத்துக்கான மையம் என்ற பெயரை உயிரூட்டும் முயற்சிகளையும், மேலும் சர்வதேச போக்குவரத்து இணைப்பை மீண்டும் பழையநிலைக்கு கொண்டு வர முயற்சிகளையும் இரண்டு மடங்கு மேற்கொள்வதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் தெரிவித்துள்ளார்.

உலகளவில் விமான சேவை மீண்டும் தொடங்கும் போது சர்வேதச விமான போக்குவரத்து மையம் என்ற பெயரை சிங்கப்பூர் மீண்டும் பெறும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் சுமார் 3,200 பெண்கள் வேலையிழந்துள்ளனர் – மனிதவள அமைச்சர்..!

தொழிற்நுட்பம் மற்றும் புதுமைகளின் உலகளாவிய ஆசிய சங்கமாக சிங்கப்பூரை கட்டி எழுப்ப அரசாங்கம் பாடுபடும் என்றும் திரு ஹெங் தெரிவித்துள்ளார்.

மேலும், கடல்வழி தொடர்புகளை மீண்டும் வலுப்படுத்த சிங்கப்பூர் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதில் நாடு முழுவதும் முக்கிய கடல்வழி பாதைகளை அமைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதில் கப்பல் போக்குவரத்துக்கான திறன்களை மேம்படுத்துதல், வர்த்தக வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் மீது நடத்தப்படும் தவறான நடத்தைகளுக்கு பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…