பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் மீது நடத்தப்படும் தவறான நடத்தைகளுக்கு பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்..!

Singapore Abusive behaviours Bus driver
(Photo Credit : Gov.sg and SBS Transit Ltd)

சிங்கப்பூர் பொதுப் போக்குவரத்துத் ஊழியர்கள் மீது நடத்தப்படும் தவறான நடத்தைகளுக்கு சட்டத்தின் கீழ் பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று மூத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சீ ஹாங் டாட் தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் இல்லாமல் பேருந்தில் ஏறிய பயணிகளால் பேருந்து ஓட்டுநர் பலமுறை தொடர்ந்து தாக்கப்பட்டதாக செய்தி ஊடகங்களில் வெளியானது.

இதையும் படிங்க : சட்டவிரோதமாக பணிப்பெண்களை பணியில் ஈடுபடச் செய்யும் முதலாளிகளுக்கான தண்டனை கட்டமைப்பு மறுஆய்வு செய்யப்படும் – MOM

இந்த சம்பவம் குறித்து அமைச்சர் சீ ஹாங் கூறுகையில், பொதுப் போக்குவரத்து ஊழியர்களை வாய்மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தாக்கப்பட்டால் சட்டத்தின் கீழ் பெரும் விளைவுகளையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று தெரிவித்தார்.

(Photo Credit : SBS Transit Ltd)

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அதிபர் ஸ்டார் சேரிட்டி நிகழ்ச்சியில் S$10.4 மில்லியனுக்கும் அதிகமான நிதி திரட்டு..!

மேலும், இந்த சம்பவத்தின் பொது பேருந்து ஓட்டுனருக்கு உதவ முன்வந்த மூன்று பேரை அமைச்சர் சீ ஹாங் பாராட்டினார்.

தக்க சமையத்தில் முன்வந்து சரியானதைச் செய்வதற்கான தைரியத்திற்காக அவர்களை பாராட்டுவதாக அவர் கூறினார்.

கடந்த சில மாதங்களாக, அதாவது அதிரடி திட்டம் அமலுக்கு வந்த பின் பொதுப் போக்குவரத்தில் பொது சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்க கூறியதற்காக பேருந்து ஓட்டுனர்கள் வாய்மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தாக்கப்பட்ட பல வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆடு நிலவரப்படி இதுவரை SBS Transit ஊழியர்கள் சுமார் 40 துன்புறுத்தல் சம்பவங்களைச் சந்தித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் பாதி சம்பவங்கள் முகக்கவசம் தொடர்பான அத்துமீறல் என்று SBS Transit தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தோர் விவரம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…