சிங்கப்பூரில் கிருமித்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தோர் விவரம்..!

(Photo: Roslan Rahman/ AFP/Getty Images)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து மேலும் 13 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

மொத்தத்தில் 57,575 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைந்து மருத்துவமனைகள் அல்லது சமூக பராமரிப்பு வசதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் HDB வீடுகளில் வசிக்கும் குடுபங்களுக்கு இம்மாதத்திற்கான GST வவுச்சர் தள்ளுபடி..!!

தற்போது 43 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று MOH தெரிவித்துள்ளது.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவும் அல்லது உடல்நலம் தேறியும் வருகின்றனர் என்றும், யாரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும், 167 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு லேசான அறிகுறிகள் காணப்பட்டதாகவும் அல்லது மருத்துவ ரீதியாக நன்றாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை, நோய்த்தொற்று காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பணியிடங்களில் பாகுபாடு தொடர்புடைய புகார்களில் கர்ப்பம் தரித்தல் தொடர்பான புகார்கள் மிக அதிகம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…