சிங்கப்பூரில் பணியிடங்களில் பாகுபாடு தொடர்புடைய புகார்களில் கர்ப்பம் தரித்தல் தொடர்பான புகார்கள் மிக அதிகம்..!

Photo: Reuters

சிங்கப்பூரில் பணியிடங்களில் காட்டப்படும் பாகுபாடு தொடர்புடைய புகார்களில் கர்ப்பம் தரித்தல் தொடர்பான புகார்கள் மிக அதிகமாக உள்ளதாக AWARE அமைப்பு தெரிவித்துள்ளதாக “செய்தி” குறிப்பிட்டுள்ளது.

அதாவது பெண்கள் கர்ப்பக் காலத்தில், சம்பள குறைப்பு மற்றும் பதவி தகுதி குறைப்பு போன்றவற்றை சந்திப்பதாக கூறப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

பணியிடங்களில் காட்டப்படும் பாகுபாடு தொடர்புகளில், கடந்த ஆண்டு 50 புகார்கள் கிடைத்ததாக AWARE அமைப்பு தெரிவித்தது. அதில் சுமார் 80 சதவீதம் கர்ப்பிணிகள், பராமரிப்பு வழங்குபவர்கள் தொடர்புடையவை என்றும் குறிப்பிட்டுள்ளது.

பணியிடங்களில் கர்ப்பிணிகளின் முன்னேற்றம் குறித்த பாதுகாப்பு சட்டங்களை மேம்படுத்தப்பட வேண்டும் என்று AWARE உள்ளிட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்மணி ஒருவர் தன்னுடைய கர்ப்பிணி காலத்தில், 2 மாதம் சம்பளம் இல்லாமல் விடுப்பில் போக கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அதே போல 2வது குழந்தை தரித்த போது அவரது பதவி தரம் குறைக்கப்பட்டு, சம்பளமும் சுமார் 40 சதவீதம் குறைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

கூடுதல் கடுமையான சட்டம், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தீபாவளியை முன்னிட்டு ஒளிரும் லிட்டில் இந்தியா – துணைப் பிரதமர் ஹெங் வாழ்த்து..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…