சிங்கப்பூரில் கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

Rivervale Plaza Loyang food court Covid-19 places
(Photo: Rivervale Plaza)

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிய இடங்களின் பட்டியலில், மால் மற்றும் உணவு நிலையங்கள் இடம்பெற்றுள்ளதாக MOH தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தீபாவளியை முன்னிட்டு ஒளிரும் லிட்டில் இந்தியா – துணைப் பிரதமர் ஹெங் வாழ்த்து..!

புதிய இடங்கள்:
  • செப்டம்பர் 30ஆம் தேதி, மாலை 4.35 மணி முதல் மாலை 5.10 மணி வரை Rivervale Plazaவில் உள்ள பார்பர் பாயிண்ட் (Barber Point)
  • அக்டோபர் 1ஆம் தேதி, காலை 8.30 மணி முதல் காலை 9 மணி வரை 4A லோயங் லேனில் உள்ள 64+4 உணவங்காடி நிலையம்

கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோருக்குத் தகவல் அளிக்கப்படும் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மொத்தம் 444 முதலாளிகளுக்கு S$10 மில்லியன் தொகை மறுப்பு..!

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் துணிச்சலுடன் செயல்பட்ட 2 வெளிநாட்டு ஊழியர்களுக்கு காவல்துறை விருது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…