சிங்கப்பூரில் துணிச்சலுடன் செயல்பட்ட 2 வெளிநாட்டு ஊழியர்களுக்கு காவல்துறை விருது..!

Foreign workers police award
(Photo: SPF)

சிங்கப்பூரில் துணிச்சலுடன் செயல்பட்ட இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் காவல் படையின் பொது நல விருதைப் பெற்றனர்.

கத்தியை வைத்திருந்த ஒருவரைத் தடுக்க காவல்துறை அதிகாரிக்கு உதவியதற்காக இந்த சிங்கப்பூர் காவல் படையின் பொது நல விருது வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 62 பெண்கள் கைது..!!

இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நண்பகல், பிளாக் 409 சுவா சூ காங் (Choa Chu Kang) அவென்யூ 3இல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் கத்தி வைத்திருந்த ஒருவர் சம்பந்தப்பட்ட சம்பவத்தைக் கண்ட சார்ஜென்ட் எசேக்கியல் லெட்சுமனன் கே சாமிநாதன் வீட்டில் இருந்தார்.

பின்னர், அந்த நபர் ஆயுதம் ஏந்தியிருப்பதை உணர்ந்த சார்ஜென்ட் எசேக்கியேல் அருகிலுள்ள வேலைத் தளத்தில் இருந்த, திரு பஞ்சவர்னம் சுரேஷ் மற்றும் திரு ரவி சந்தோஷ்குமார் ஆகிய இரு ஊழியர்களின் உதவியை நாடினார்.

அந்த ஆயுதமேந்திய நபரை கட்டுக்குள் கொண்டுவர, சார்ஜென்ட் எசேக்கியல் அவர்களுக்கு, அந்த இரு ஊழியர்களும் உதவியதாக காவல்துறை தெரிவித்தனர்.

“சார்ஜென்ட் எசேக்கியலும், இரண்டு ஊழியர்களும் மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் செயலை தடுக்க தங்களது துணிச்சலைக் காட்டினர்” என்று உதவி காவல்துறைத் துணை ஆணையர் திரு. தேவராஜன் பாலா கூறினார்.

“எங்கள் வெளிநாட்டு ஊழியர்கள், பொதுமக்களுக்கு உதவி வழங்க முன்வருவது இது முதல் முறை அல்ல” என்றும் அவர் மேலும் கூறினார். “அவர்களின் தன்னலமற்ற செயல் மிகவும் பாராட்டத்தக்கது” என்றும் பாராட்டினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் மற்றொரு ஊழியரை தாக்கிய ஊழியருக்கு சிறை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…