சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் மற்றொரு ஊழியரை தாக்கிய ஊழியருக்கு சிறை..!

illegal betting activities investigation
(Rep. Image)

சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் தீயணைப்புக் கருவியால் மற்றொரு ஊழியரை தாக்கிய, கட்டுமானத்துறை சார்ந்த ஊழியருக்கு நேற்று வியாழக்கிழமை (அக். 1) மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் 44 வயதான சண்முகடையர் தண்டபாணி, ஜூலை மாதம் உபியில் (Ubi) உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஆபத்தான ஆயுதத்தால் தானாக முன்வந்து தாக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதையும் படிங்க : கடந்த 6 மாத நிலவரப்பபடி, தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைவு..!

இருவரும் இந்தியாவைச் சேர்ந்த கட்டுமான ஊழியர்கள், உபி கிரசெண்ட்டில் உள்ள பிளாக் 57இல் தங்கியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை 30ஆம் தேதி இரவு 10 மணியளவில், சண்முகடையர் அறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார், அவருடன் மற்றவரும் தங்கியுள்ளனர். அப்போது தாக்கப்பட்ட ஊழியர் தனது நண்பரைப் பார்க்க வந்துள்ளார்.

சண்முகடையர் அவரின் வருகையை விரும்பவில்லை,  ஏன் தனது அறைக்குச் வந்தார் என்று சண்முகடையர் கேட்டார். அதனை தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில், தாக்கப்பட்டவரின் புகைப்படத்தை எடுக்க சண்முகடையர் தனது தொலைபேசியை எடுத்துள்ளார், அதை தொடர்ந்து அறையிலிருந்து அவர் வெளியேறிய பின்னரும், சண்முகடையர் ஊழியரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

பின்னர், அவர் ஒரு தீயணைப்பு கருவியை எடுத்து, ஊழியரின் கழுத்தின் பின்புறத்தில் தாக்கினார், இதனால் அவர் தரையில் மயங்கி விழுந்தார். மேலும், அவரது புருவம் மற்றும் உதடுகளிலிருந்து இரத்தம் வந்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

பின்னர் சண்முகடையர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது மூன்று மாதச் சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே தாமாக முன்வந்து ஆயுதத்தால் காயம் ஏற்படுத்தினால், 7 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : சாலையை கடக்க முயன்ற இருவரை கார் ஒன்று மோதி விபத்து..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…