கடந்த 6 மாத நிலவரப்படி, தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைவு..!

foreigners need social works
Pic: Roslan RAHMAN / AFP

தினசரி COVID-19 சம்பவங்கள் எண்ணிக்கையின் நேற்றைய நிலவரப்படி, ஆறு மாதங்களில் முதல் முறையாக தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை விட, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று CNA தொகுத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, 21 புதிய கிருமித்தொற்று பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சாலையை கடக்க முயன்ற இருவரை கார் ஒன்று மோதி விபத்து..!

சுகாதார அமைச்சகம், COVID-19 பாதிப்புகளை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துகிறது: அவை, வெளிநாடுகளில் இருந்து வந்தது, சமூகம் மற்றும் தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள்.

நேற்று அறிவிக்கப்பட்ட புதிய பாதிப்புகளில், 15 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், 3 பேர் சமூக அளவில், மேலும் 3 பேர் தங்கும் விடுதிகளில் கண்டறியப்பட்டுள்ளனர்.

ஆறு மாதங்களில் முதல் முறையாக வெளிநாட்டிலிருந்து வந்த தினசரி புதிய தொற்று பாதிப்புகள், தங்கும் விடுதி தினசரி எண்ணிக்கையை தாண்டியது.

இதற்கு முன்னர், ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி, தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களை விட வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களுக்கு அதிகமான பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதே போல, புதிய COVID-19 கிருமித்தொற்று சம்பவங்கள் சமீபத்தில் கண்டறியப்பட்ட பின்னர், Space@Tuas தங்கும் விடுதியில் வசிக்கும் மொத்தம் 342 ஊழியர்கள் அரசாங்க தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று வியாழக்கிழமை (அக் 1) தெரிவித்துள்ளது.

தங்கும் விடுதி ஆபரேட்டர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், முதலாளிகள் தங்கள் ஊழியர்கள் தொடர்ந்து வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் MOM கூறியுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரிலிருந்து 6ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…