தங்கும் விடுதியில் வசிக்கும் 342 ஊழியர்கள் அரசாங்க தனிமைப்படுத்தும் வசதிக்கு மாற்றம்..!

Foreign workers dormitory quarantine
(Photo: Google Maps)

புதிய COVID-19 கிருமித்தொற்று சம்பவங்கள் சமீபத்தில் கண்டறியப்பட்ட பின்னர், Space@Tuas தங்கும் விடுதியில் வசிக்கும் மொத்தம் 342 ஊழியர்கள் அரசாங்க தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) வியாழக்கிழமை (அக் 1) தெரிவித்துள்ளது.

இந்த புதிய தொற்று பாதிப்புகள் கடந்த திங்களன்று உறுதிசெய்யப்பட்டது, இவை வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து ஆடவர் மரணம்; குதித்துவிடுவதாக அச்சுறுத்திய பெண் ஒருவரும் கைது..!

மேலும், பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வந்த பிளாக்குகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கட்டாயமாக செயல்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

இதில், 27 முதலாளிகளின் கீழ் பணிபுரியும் சுமார் 342 ஊழியர்கள், தொற்று பாதிக்கப்பட்ட பிளாக்குகளில் வசிப்பதால், அவர்களுக்கு ஆபத்து இருக்கும் நோக்கில், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதாக அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

முன்னர், Space@Tuas தங்கும் விடுதியில் உள்ள இரண்டு பிளாக்குகளில் வசிக்கும் ஊழியர்களுக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் இரண்டு பிளாக்குகளிலும் உள்ள ஊழியர்கள் ஒன்றிணைவதைத் தடுப்பதற்கான உடல் ரீதியான பிரிக்கும் நடவடிக்கைகள் மீறப்பட்டிருக்கலாம் என்று MOM குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து 6ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணை..!

மேலதிக விசாரணையில், வெவ்வேறு பிளாக்குகளை சேர்ந்த ஊழியர்கள் ஒன்றிணைவது சாத்தியமில்லை என்றும், அதன் பின்னர் பாதிக்கப்படாத பிளாக்குகளுக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

அனைத்து தங்கும் விடுதி ஆபரேட்டர்கள், முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் விடுதிகளுக்குள் மேற்கொள்ளப்படும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்க வேண்டும் என்று MOM வலியுறுத்தியுள்ளது.

தங்கும் விடுதி ஆபரேட்டர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், முதலாளிகள் தங்கள் ஊழியர்கள் தொடர்ந்து வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் MOM கூறியுள்ளது.

இதையும் படிங்க : குறிப்பிட்ட இரு நாடுகளை சேர்ந்த பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…