சிங்கப்பூரில் மொத்தம் 444 முதலாளிகளுக்கு S$10 மில்லியன் தொகை மறுப்பு..!

employers JSS Scheme Iras
(Photo: TODAY)

சிங்கப்பூரில் மொத்தம் 444 முதலாளிகளுக்கு, வேலை ஆதரவு திட்டத்தில் (JSS) சுமார் S$10 மில்லியன் தொகை மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நான்கு வழக்குகள் விசாரணைக்காக காவல்துறைக்கு பரிந்துரைக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான உணவகம் – பொதுமக்களுக்கான கட்டண விவரம் வெளியீடு..!

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (Iras) வெளியிட்ட அறிக்கையில், மொத்தம் சுமார் S$10 மில்லியன் அதில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது.

ஜூலை மாதத்திற்கான JSS திட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மேலும் 2,200 முதலாளிகள் மதிப்பாய்வு செய்யப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளது.

மதிப்பாய்வின் போது ஏதேனும் சிக்கல்கள் காணப்பட்டால், தொகை செலுத்துதல் சரிசெய்யப்படும் அல்லது மறுக்கப்படும். மேலும் எந்தவொரு மோசமான விவகாரம் இருந்தாலும் காவல்துறைக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தவறான நடவடிக்கைகளின், எதிர்ப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாகும், மேலும் JSS தொகை செலுத்துதல்கள் நியாயமாகவும் சரியாகவும் வழங்கப்படுவதை உறுதிசெய்கிறது என்றும் அது தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் துணிச்சலுடன் செயல்பட்ட 2 வெளிநாட்டு ஊழியர்களுக்கு காவல்துறை விருது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…