சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான உணவகம் – பொதுமக்களுக்கான கட்டண விவரம் வெளியீடு..!

Singapore airlines flight restaurant cost
(Photo: Singapore Airlines)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் (SIA) புது முயற்சியாக, அதன் வாடிக்கையாளர்களுக்கு ஏர்பஸ் A380 விமானங்களில் உணவகம் அமைத்துள்ளது.

இதற்கான கட்டண விவரம் தற்போது வெளியாகியுள்ளது, அதில் ஒரு வேளை உணவிற்கு S$50 முதல் S$300 வரை வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் துணிச்சலுடன் செயல்பட்ட 2 வெளிநாட்டு ஊழியர்களுக்கு காவல்துறை விருது..!

மேலும், இதில் அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சாப்பிடலாம் என்றும், விமானம் சாங்கி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் SIA கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) அன்று அறிக்கையில் தெரிவித்தது.

COVID-19 தொற்று காரணமாக விமானச் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், விமான நிறுவனங்கள் தங்களில் வருமானத்திற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

கட்டண விவரம்:
  • எகானமி – S$50 (மூன்று வகையான உணவுகள்)
  • பிரீமியம் எகானமி – S$90 (மூன்று வகையான உணவுகள்)
  • பிசினஸ் பிரிவு – S$300 (நான்கு வகையான உணவுகள்)
  • அறைகள் – S$600 (நான்கு வகையான உணவுகள்)

இதையும் படிங்க : சிங்கப்பூரில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 62 பெண்கள் கைது..!!

அத்துடன் இலவச மதுபானங்களும், மற்ற பானங்கள் வழங்கப்படும் என்றும், மேலும் திரைப்படம் திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIA செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விமானம் நிறுத்தப்பட்டு ஒரு நுழைவாயில் அறையுடன் இணைக்கப்படும், வாடிக்கையாளர்கள் ஏரோபிரிட்ஜ் வழியாக A380க்குள் நுழையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாரம்பரிய உடைகளான சரோங் கெபயா, சியோங்சாம், சேலை, பாடிக் சட்டை போன்றவை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளாக வழங்கப்படும்.

உணவகம் A380க்கான முன்பதிவு அக்டோபர் 12ஆம் தேதி SIAஇன் KrisShop இணையதளத்தில் தொடங்கும். விமானத்தை முழுமையாக சுத்தம் செய்வது உட்பட அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் மற்றொரு ஊழியரை தாக்கிய ஊழியருக்கு சிறை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…