விமானத்தில் உணவகம்; SIAவின் புதிய முயற்சி..!!

Singapore SIA flight restaurant
SIA introduces Restaurant in its Airbus. (Photo Credit : Singapore Airlines)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் (SIA) வாடிக்கையாளர்களுக்காக அதன் ஏர்பஸ் A380 விமானங்கள் ஒன்றில் புது முயற்சியாக உணவகம் அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சாப்பிடலாம் என்றும், விமானம் சாங்கி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்று SIA செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) அன்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

SIAஇன் தலைமை நிர்வாக அதிகாரி திரு கோ சூன் போங் கூறுகையில், கடந்த சில வாரங்களாக எங்கள் வாடிக்கையாளர் இந்த முயற்சிகளில் நிறைய ஆர்வம் செலுத்தினர், மேலும் அவர்களின் சிறந்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.,

இதில், டபுள் டெக்கர் சூப்பர்ஜம்போ விமானத்தில் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான அறையில் மதிய உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIA செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விமானம் நிறுத்தப்பட்டு ஒரு நுழைவாயில் அறையுடன் இணைக்கப்படும், வாடிக்கையாளர்கள் ஏரோபிரிட்ஜ் வழியாக A380க்குள் நுழையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச உணவு வகைகளிலிருந்தும், சிங்கப்பூர் சமையல்காரர் ஷெர்மே லீ வடிவமைத்த சிறப்பு மெனுவிலிருந்து வாடிக்கையாளர்கள் உணவை தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவில் இருந்து திரும்பிய வேலை அனுமதி உடையோர் பாதிப்பு..!

மேலும், பாரம்பரிய உடைகளான சரோங் கெபயா, சியோங்சாம், சேலை, பாடிக் சட்டை போன்றவை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.

உணவகம் A380க்கான முன்பதிவு அக்டோபர் 12 ஆம் தேதி SIAஇன் KrisShop இணையதளத்தில் தொடங்கும் என்றும், A380 இன் உட்புறங்கள் மற்றும் தனியார் பகுதிகளின் 15 நிமிட சுற்றுப்பயணத்திற்கான தேர்தெடுக்கப்பட்ட இடங்களும் முதலில் வந்தவர்கள் அடிப்படையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தை முழுமையாக சுத்தம் செய்வது உட்பட அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் குடியிருப்பு முகவரி மாற்றம் சேவை தற்போது ஆன்லைனில்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…