சிங்கப்பூரில் குடியிருப்பு முகவரி மாற்றம் சேவை தற்போது ஆன்லைனில்..!

Singapore Address change online
Singapore residents can report a change in residential address online. (Photo : MotherShip)

சிங்கப்பூரில் அடுத்த மாதம் அக்டோபர் 1, முதல் குடியிருப்பாளர்கள் தங்களின் குடியிருப்பு முகவரியின் மாற்றத்தை ஆன்லைனில் செய்யலாம். இது தொடர்பாக இனி காவல் நிலையம் செல்ல தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் (அதாவது குடிமக்கள் மற்றும் நிரந்தர வாசிகள்) தங்கள் குடியிருப்பு முகவரியில் மாற்றத்தை ஆன்லைனில் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தமிழ் மொழியிலும் இனி கலந்துரையாடல் நிகழ்ச்சி..!

மேலும், இந்த புதிய இ-சேவை ஆங்கிலம், தமிழ், மலாய் மற்றும் மாண்டரின் ஆகிய மொழிகளில் சேவைகள் உள்ளதாகவும், ஒரே வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் ஒரே முகவரியில் தங்கள் முகவரியைப் புதுப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைனில் முகவரி மாற்றத்தை செய்ய கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றவும் :

  • விண்ணப்பதாரர்கள் தங்கள் சிங்பாஸைப் பயன்படுத்தி ICAவின் இணையதளத்தில் (https://go.gov.sg/ic-address) முகவரி மாற்றுவதை அணுகலாம்.
  • தங்கள் புதிய முகவரிக்கு அஞ்சல் மூலம் தனிப்பட்ட பின்னைப் (PIN) பெறுவீர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் புதிய முகவரியை சரிபார்க்க பெறப்பட்ட PIN இ-சேவையில் பதிவிடவேண்டும்
  • சரிபார்த்த பின்னர், விண்ணப்பதாரர்கள் தங்கள் முகவரி மாற்றம் வெற்றிகரமாக இருப்பதாக உடனடி ஒப்புதலைப் பெறுவீர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களது புதிய முகவரியைக் கொண்ட ஸ்டிக்கரைக் கொண்ட இரண்டாவது அஞ்சலைப் பெறுவார்கள். மேலும், வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி ஸ்டிக்கரை அவர்களின் IC-யின் பின்புறத்தில் இணைக்க வேண்டும்.

இப்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகில், சிங்கப்பூரில் ஒரு புதிய முகவரிக்குச் சென்றவர்கள், அக்கம்பக்கத்து காவல்துறையில் தங்கள் முகவரி மாற்றத்தை அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும்.

ஆனால், டிசம்பர் 1, 2020 முதல், காவல்துறையினர் இந்த முகவரி புதுப்பிப்புகள் சேவைகளை நிறுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் இதைச் செய்ய முடியாதவர்கள் உதவிக்கு ICA-ஐ தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு அக்டோபர் மாதம் முதல் இயக்கப்படும் விமானங்களின் பட்டியல்.!!

தவறான முகவரியைப் பதிவிடுவது குற்றம் :

  • தவறான முகவரியை மாற்ற மற்றும் பதிவிட முயற்சிப்பது குற்றமாகும்.
  • தேசிய பதிவு விதிமுறைகளின் கீழ், தவறான குடியிருப்பு முகவரியைப் பதிவிடும் எவருக்கும் S$3,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • புதிய முகவரி ஸ்டிக்கரை IC-யில் இணைக்க பயனர் தவறினால் அதுவும் குற்றமாகும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலையின்போது கீழே விழுந்ததில் வெளிநாட்டு ஊழியர்கள் பாதிப்பு – இழப்பீடு கோரி வழக்கு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…