சிங்கப்பூரில் HDB வீடுகளில் வசிக்கும் குடுபங்களுக்கு இம்மாதத்திற்கான GST வவுச்சர் தள்ளுபடி..!!

HDB households to receive GST voucher rebate for utilities bills this month
HDB households to receive GST voucher rebate for utilities bills this month. (Photo Credit : Today)

சிங்கப்பூரில் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் (HDB) வீடுகளில் வசிக்கும் 940,000 குடும்பங்களுக்கு இந்த மாதம் GST வவுச்சர் மற்றும் U-Save தள்ளுபடிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள் வழக்கமாகப் பெறும் GST வவுச்சர் மற்றும் U-Save தள்ளுபடிகளைவிட HDB வீடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் குடும்பங்கள் இந்த நிதியாண்டில் ஒரு மடங்கு அதிகமாகப் பெறுவார்கள் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, ஐந்து பேருக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு வழக்கமாக பெரும் தள்ளுபடிகளை விட இரண்டரை மடங்கு அதிகமான சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பணியிடங்களில் பாகுபாடு தொடர்புடைய புகார்களில் கர்ப்பம் தரித்தல் தொடர்பான புகார்கள் மிக அதிகம்..!

இந்த சலுகைகள் பராமரிப்பு மற்றும் ஆதரவுத் தொகுப்புத்திட்டத்தின் கீழ் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிதியாண்டில் இது மூன்றாம் முறையாகப் GST வவுச்சர் மற்றும் U-Save தள்ளுபடிகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டில், அரசாங்கம் மொத்தம் S$630 மில்லியன் மதிப்புள்ள GST வவுச்சர் மற்றும் U-Save தள்ளுபடிகளை வழங்குகிறது.

மேலும், குறிப்பாகக் குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்களை பெரும் குடும்பங்களின் செலவுகளைக் குறைக்க ஆதரவு வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்து.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…