சட்டவிரோதமாக பணிப்பெண்களை பணியில் ஈடுபடச் செய்யும் முதலாளிகளுக்கான தண்டனை கட்டமைப்பு மறுஆய்வு செய்யப்படும் – MOM

Maids punishment framework' for employers
(PHOTO: Reuters)

சட்டவிரோதமாக தங்கள் பணிப்பெண்களை பணிகளில் ஈடுபடச் செய்யும் முதலாளிகளுக்கான தண்டனை கட்டமைப்பை மனிதவள அமைச்சகம் (MOM) மறுஆய்வு செய்யும் என்று மனிதவள அமைச்சர் கான் சியோ ஹுவாங் (Gan Siow Huang) திங்களன்று (அக். 5) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுபோன்ற தவறிழைக்கும் முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதலாளிகளுக்குத் தெரியாமல் அவர்கள் பணிகளில் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஐந்து பேர் மட்டுமே கூடலாம் என்ற வரம்பை நீக்குவது குறித்து பரிசீலனை – சுகாதார அமைச்சர்..!

முதலாளிகள் தங்கள் வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு பொறுப்பு என்பதை நினைவூட்டுவதோடு, பணியமர்த்தல் சட்டத்திற்கு முரணாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமதி கான் கூறியுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆண்டுக்கு இடையில் வரை, பணிப்பெண்கள் சட்டவிரோதமாக பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக சராசரி 550 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இவர்களில், ஆண்டுக்கு சராசரியாக 155 முதலாளிகளுக்கு எதிராக MOM நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தோனேசியப் பணிப்பெண் பார்ட்டி லியானி வழக்கில் MOM எடுத்த நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் யோ வான் லிங்கின் கேள்விக்கு கான் பதிலளித்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் செந்தோசா கடற்கரைகளுக்கு செல்ல முன்பதிவு தேவை..!

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அதிபர் ஸ்டார் சேரிட்டி நிகழ்ச்சியில் S$10.4 மில்லியனுக்கும் அதிகமான நிதி திரட்டு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…