சிங்கப்பூர் செந்தோசா கடற்கரைகளுக்கு செல்ல முன்பதிவு தேவை..!

Crowds head to Sentosa beaches, ahead of online booking requirement for visitors
(Photo: TODAY)

சிங்கப்பூரில் கிருமிப்பரவலை கட்டுப்படுத்த தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக செந்தோசா கடற்கரைகளுக்கு செல்ல வரும் 17ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் போன்ற அதிக கூட்டம் சேரும் நாட்களில் கடற்கரை செல்ல விரும்புவோர் முன்பதிவு செய்யவேண்டும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அதிபர் ஸ்டார் சேரிட்டி நிகழ்ச்சியில் S$10.4 மில்லியனுக்கும் அதிகமான நிதி திரட்டு..!

வருகைகையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேரங்களில் முன்பதிவு செய்யலாம், அதாவது காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை, அதே போல மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை ஒதுக்கப்பட்ட இடங்களை தேர்வு செய்யலாம்.

ஒரு பதிவில் 5 பேர் வரை இடம்பெறலாம், இதற்கான உறுதி மின்னஞ்சலை பதிவு செய்வோர் பெறுவார்கள், பின்னர் அந்த உறுதி மின்னஞ்சலை அங்கு நுழைவு கூடத்தில் வருகையாளர்கள் காட்ட வேண்டும்.

கடந்த ஜூலை மாதத்திலிருந்து, தஞ்சோங், பலாவான், சிலோசோ ஆகிய மூன்று கடற்கரைகளும் மொத்தம் 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பு இடைவெளியுடன் சுமார் 100 முதல் 350 பேர் வரையில் கூடலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தோர் விவரம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…