சிங்கப்பூரில் அதிபர் ஸ்டார் சேரிட்டி நிகழ்ச்சியில் S$10.4 மில்லியனுக்கும் அதிகமான நிதி திரட்டு..!

President's Star Charity 2020 raises
(Photo: Giving.sg website)

அதிபரின் ஸ்டார் சேரிட்டி 2020 என்ற நிதி திரட்டும் நிகழ்ச்சியில், நேற்றைய (அக். 4) நேரடி நிகழ்ச்சியின் முடிவில் சுமார் S$10,423,381 நன்கொடை திரட்டப்பட்டதாக மீடியாக்கார்ப் செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

பிரிட் விருதுகள் 2020 (Brit Awards 2020) புதிய வெற்றியாளர் லூயிஸ் கபால்டி (Lewis Capaldi) மற்றும் இந்தோனேசிய பாப் நட்சத்திர பாடகர் ரோசா (Rossa) ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு சேர்த்தனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தோர் விவரம்..!

சிங்கப்பூர் பாடகர்-பாடலாசிரியர்களான Jarell Huang மற்றும் ஜே.ஜே. நியோ ஆகியோர், சேரிட்டியின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் முதல் அதிபர் ஸ்டார் சேரிட்டி தீம் பாடலான “Believe” என்ற பாடலை எழுதினர்.

இந்த நிகழ்ச்சி முதன் முறையாக பார்வையாளர்கள் நேரடி பங்கேற்பு இல்லாமல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த ஆண்டு நிதி திரட்டு உடற்குறையுள்ளவர்களுக்கு உதவுதை நோக்காக கொண்டு அமைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபரின் ஸ்டார் சேரிட்டி 2020-லிருந்து கிடைக்கும் நிதி, கேர் கார்னர் சீனியர் சர்வீசஸ் மற்றும் ஊனமுற்றோருக்கான இயக்கம் (MINDS) உள்ளிட்ட 72 அமைப்புகளுக்கு உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வங்கி செயலிகள் வழியாக, PayNow QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது giving.sg/psc2020 என்ற இணையம் வழியாகவும் அக் .11 இரவு 11.59 மணி வரை நன்கொடை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் HDB வீடுகளில் வசிக்கும் குடுபங்களுக்கு இம்மாதத்திற்கான GST வவுச்சர் தள்ளுபடி..!!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…