ஐந்து பேர் மட்டுமே கூடலாம் என்ற வரம்பை நீக்குவது குறித்து பரிசீலனை – சுகாதார அமைச்சர்..!

Singapore Dinings limits
Dinings and social gatherings limits could be lifted says health Minister. (Photo Credit : Gan Kim Yong on Facebook)

சிங்கப்பூர் COVID-19 தொடர்பான அமைச்சக குழு (MTF) ஐந்து பேர் மட்டுமே கூடலாம் என்ற வரம்பை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் இன்று (அக்டோபர் 5) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது, சமூக அளவில் COVID-19 பாதிப்பு குறைந்த எண்ணிக்கையில் இருப்பது தற்செயலானவை அல்ல என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அதிபர் ஸ்டார் சேரிட்டி நிகழ்ச்சியில் S$10.4 மில்லியனுக்கும் அதிகமான நிதி திரட்டு..!

மேலும், இவை அனைத்தும் கூட்டு கடின உழைப்பு மற்றும் தியாகங்கள் காரணமாக நிகழ்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிலைமை கட்டுப்பாட்டில் இருந்தால், சிங்கப்பூரின் பொருளாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் நீக்கப்படலாம் என்று அமைச்சர் கான் தெரிவித்தார்.

பொது இடங்கள் மற்றும் சாப்பிடும் இடங்களில் ஐந்திற்கும் மேலான நபர்களை அனுமதிப்பதை பரிந்துரை செய்கிறோம் என்று அமைச்சர் கூறினார். இதனால், பெரிய குடும்பங்கள் அல்லது நண்பர்களின் குழுக்கள் சந்தித்து சாப்பிடலாம் என்று அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் மூன்றாம் கட்டத்தை நோக்கி நகரும்போது, ​​இந்த புதிய இயல்பானது COVID-19-க்கு முந்தைய நாட்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும் என்று அமைச்சர் கான் கூறினார்.

மூன்றாம் கட்டம் குறித்து வரும் வாரங்களில் நாங்கள் தயாராக இருக்கும்போது கூடுதல் விவரங்களை பகிர்ந்து கொள்வோம் என்று அவர் மேலும் கூறினார்.

மூன்றாம் கட்டத்தை நோக்கிய முன்னேற்றங்களுக்கு மத்தியில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், பாதுகாப்பான சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கான் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தோர் விவரம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…