சிங்கப்பூரில் சுமார் 3,200 பெண்கள் வேலையிழந்துள்ளனர் – மனிதவள அமைச்சர்..!

NWC SetOut Guidelines
Photo: TODAY

இந்த 2020ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்கள் நிலவரப்படி, சிங்கப்பூரில் சுமார் 3,200 பெண்கள் வேலையிழந்துள்ளதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ தெரிவித்துள்ளார்.

இதனை அவர் நேற்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக எழுத்து மூலம் குறிப்பிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் மீது நடத்தப்படும் தவறான நடத்தைகளுக்கு பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்..!

அதாவது, முதல் ஆறு மாதங்களில் 6,460 சிங்கப்பூர்வாசிகள் வேலையிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் பாதி நபர்கள் பெண்கள் என்றும் திரு தியோ குறிப்பிட்டார் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்கு உள்ளான சில நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை ஆள்குறைப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, சட்டவிரோதமாக தங்கள் பணிப்பெண்களை பணிகளில் ஈடுபடச் செய்யும் முதலாளிகளுக்கான தண்டனை கட்டமைப்பை மனிதவள அமைச்சகம் (MOM) மறுஆய்வு செய்யும் என்று மனிதவள அமைச்சர் கான் சியோ ஹுவாங் (Gan Siow Huang) நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுபோன்ற தவறிழைக்கும் முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதலாளிகளுக்குத் தெரியாமல் அவர்கள் பணிகளில் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சட்டவிரோதமாக பணிப்பெண்களை பணியில் ஈடுபடச் செய்யும் முதலாளிகளுக்கான தண்டனை கட்டமைப்பு மறுஆய்வு செய்யப்படும் – MOM

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…