பாதுகாப்பான நாடுகளுடன் மீண்டும் விமான பயணத்தை தொடங்க சிங்கப்பூர் பேச்சுவார்த்தை..!

Singapore 30-day visa-free entry China

சிங்கப்பூர் ஏர் டிராவல் பபுல் (Air Travel Bubbles) என்னும் விமான போக்குவரத்துக்கு சேவையை பாதுகாப்பான நாடுகள் அல்லது பிராந்தியங்களுடன் மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடத்தும் என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யே குங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார்.

இந்த இருவழி பயண சேவை, வர்த்தக மற்றும் அதிகாரபூர்வ பயணிகளுக்கான பரஸ்பர பச்சை வழித்தட (Reciprocal green lane) ஏற்பாடுகளிலிருந்து வேறுபடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சாங்கி ஏர்போர்ட் பரபரப்பான விமான நிலையம் என்ற பட்டியலில் 58வது இடத்திற்கு சரிவு..!

COVID-19 தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விமானத் துறைக்கான அரசாங்கத்தின் உத்திகள் குறித்து திரு ஓங் பாராளுமன்றத்தில் அறிக்கையை வழங்கினார்.

சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுடன் இதுபோன்ற சேவையை நிறுவும் நோக்கத்தை ஹாங்காங் அறிவித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதற்கு சாதகமாக பதிலளித்துள்ளதாகவும், விரைவில் ஹாங்காங் மற்றும் பிற கூட்டாளர்களுடன் கலந்துரையாடல்களைத் தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய பயண சேவையின் காரணமாக ஏற்படும் தொற்று அபாயத்தை நிர்வகிக்க, தினசரி பயணிகளின் எண்ணிக்கையில் வரம்பு, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை ஆகியவை நடப்புக்கு வரலாம் என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் மற்ற நாடுகளுக்கிடையே தனது எல்லைகளைத் மீண்டும் திறப்பது மற்றும் விமானப் பயணத்தை புதுப்பிக்க எடுக்கும் மற்ற நடவடிக்கைகளையும் அமைச்சர் தொகுத்து கூறினார்.

இதையும் படிங்க : சர்வதேச விமான போக்குவரத்து மையம் என்ற பெயருடன் சிங்கப்பூர் மீண்டும் மிளிரும் – துணைப் பிரதமர் ஹெங்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…