COVID-19 தடுப்பு மருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராக இருக்கக்கூடும் : WHO தலைவர்!

WHO COVID19 vaccine
Covid-19 vaccine could be ready by end 2020 : WHO Chief (Photo Credit : Unsplash/Tedros Twitter page)

COVID-19 தடுப்பு மருந்து இந்த ஆண்டு 2020 இறுதிக்குள் தயாராக இருக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் தெரிவித்துள்ளார்.

COVID-19 தடுப்பு மருந்து கிடைக்கும் போது அனைவருக்கும் சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய அனைத்து தலைவர்களிடமிருந்தும் ஒரு உறுதிப்பாட்டை உலக சுகாதார அமைப்பின் தலைவர் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க : பாதுகாப்பான நாடுகளுடன் மீண்டும் விமான பயணத்தை தொடங்க சிங்கப்பூர் பேச்சுவார்த்தை..!

உலக சுகாதார அமைப்பு வாரியத்தின் இரண்டு நாள் கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் Tedros Adhanom Ghebreyesus கூறுகையில், 2020 இறுதிக்குள் தடுப்பு மருந்து தயாராக இருக்கும் என்று கூறியுள்ளதாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது, உலக சுகாதார அமைப்பின் COVAX உலகளாவிய தடுப்பூசி மையத்தில் ஒன்பது பரிசோதனை தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

இது 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் US$2 billion (S$2.7 billion) தடுப்பூசி அளவை உற்பத்தி செய்து விநியோகிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு கூட்டு முயற்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த COVAXஇன் கீழ், பணக்கார மற்றும் ஏழை நாடுகள் ஒன்றிணைந்து தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுக்கு அவர்கள்  .

மேலும், இந்த முயற்சியால் பங்கேற்கும் நாடுகளில், அதிக தொற்று ஆபத்து உள்ள நாடுகள் சரியான நேரத்தில் தடுப்பூசி பெற முடியும் என்று உலக சுகாதார அமைப்பு நம்புவதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சாங்கி ஏர்போர்ட் பரபரப்பான விமான நிலையம் என்ற பட்டியலில் 58வது இடத்திற்கு சரிவு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…